உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மயான நிலம் மீட்க தலித் அமைப்பு தர்ணா

மயான நிலம் மீட்க தலித் அமைப்பு தர்ணா

தங்கவயல்: ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, எஸ்.சி.,களுக்கான மயான நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் சங்கர்ஷ சமிதி அம்பேத்கர் வாதா என்ற அமைப்பினர் நேற்று தர்ணா நடத்தினர்.ராபர்ட்சன்பேட்டை தாலுகா அலுவலகம் முன் நடந்த தர்ணா போராட்டத்திற்கு ஏ.பி.எல்.ரங்கநாதன் தலைமை வகித்தார்.பவரிலால் பேட்டை அருகே எஸ்.சி.,களுக்காக ஒதுக்கப்பட்ட மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சர்வே நடத்தி மயான நிலத்தை மீட்க வேண்டும். சஞ்சய் காந்தி நகரில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.முன்னாள் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் சிலை அமைக்க வேண்டும். நகராட்சி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக மாற்றும் நடவடிக்கையை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலித் சங்க ஒருங்கிணைப்பாளர் லட்சுமையா வாசித்து, தாசில்தார் நாகவேணியிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி