மேலும் செய்திகள்
அயோத்தி ராமரை கோலாரில் தரிசிக்க வாய்ப்பு
4 hour(s) ago
செய்திகள் சில வரிகளில்
4 hour(s) ago
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய பிரதோஷ்ராவின் வாக்குமூலத்தை தள்ளி வைக்க கோரிய நடிகர் தர்ஷனின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், அப்ரூவர் பிரதோஷ்ராவின் வாக்குமூலத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், தர்ஷன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது தர்ஷன் தரப்பு வக்கீல் ஹஷ்மத் பாஷா, ''நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்கு அவகாசம் தேவை. எனவே, பிரதோஷின் வாக்குமூலத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும். ''போலீசார் முதலில் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ள முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். அதன் பின், பிரதோசின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்,'' என்றார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தர்ஷனின் மனுவை தள்ளுபடி செய்தார். 'குறிப்பிட்ட நாளில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
4 hour(s) ago
4 hour(s) ago