உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விவசாயிக்கு மரண சான்றிதழ் கிராம அதிகாரி சஸ்பெண்ட்

 விவசாயிக்கு மரண சான்றிதழ் கிராம அதிகாரி சஸ்பெண்ட்

பெலகாவி: வி வசாயி உயிரோடு இருக்கும் போதே, அவருக்கு மரண சான்றிதழ் வழங்கிய கிராம கணக்கு அதிகாரியை, பெலகாவி மாவட்ட கலெக்டர், 'சஸ்பெண்ட்' செய்தார். பெலகாவி மாவட்டம், சவதத்தி தாலுகாவின், சுதகட்டி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ஈரப்பா நாகப்பா அப்பாயி, 53. இவரது குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர், 2021 ஜூலையில் காலமானார். இவருக்கு மரண சான்றிதழ் கோரி, கிராம பஞ்சாயத்தில் விண்ணப்பித்தார். ஆனால், கிராம கணக்கு அதிகாரி நீலா முரகோடா என்பவர், விவசாயி ஈரப்பா நாகப்பா அப்பாயி இறந்ததாக, பதிவு செய்துள்ளார். இது விவசாயிக்கு தெரியவில்லை. கடந்த 2025 ஜூலையில், தன் நிலத்துக்கு சொட்டு நீர்ப்பாசன வசதி செய்வது குறித்து, விவசாயி விண்ணப்பித்தார். அப்போதுதான் ஆவணங்களில், அவர் இறந்ததாக பதிவு செய்திருப்பது தெரிந்து, அதிர்ச்சி அடைந்தார். 'நான் உயிரோடு இருக்கிறேன்' எனக் கூறி, ஆவணங்களில் மாற்றும்படி ஐந்து மாதமாக, விவசாயி அலைகிறார். ஆனால், அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இதையறிந்த உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, நேற்று முன்தினம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளார். இது குறித்து, விசாரணை நடத்தி பிப்ரவரி 23க்குள் அறிக்கை அளிக்க, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே விவசாயி விஷயத்தில், குளறுபடி செய்த கிராம கணக்கு அதிகாரி நீலா முரகோடாவை, 'சஸ்பெண்ட்' செய்து, பெலகாவி கலெக்டர் முகமது ரோஷன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை