மேலும் செய்திகள்
'அபிமன்யு' தலைமையில் துவங்கியது கஜ பயணம்
05-Aug-2025
பெங்களூரு :ரோந்து பணிக்காக 540 வன பாதுகாவலர்களை நியமிக்கும் பணி நடந்து வருவதாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்து உள்ளார். மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் கேசவ், யானை தாக்கி உயிரிழந்தால் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது போல, மற்ற விலங்குகள் தாக்கி உயிரிழந்தாலும் அதே தொகை வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அளித்த பதில்: காட்டு யானை, புலி உட்பட வன விலங்கு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது. பாம்பு கடித்து உயிரிழந்தால், வேளாண்மை துறை மூலம் 2 லட்சம் நிவாரணம் வழங்கப்பபடுகிறது. கர்நாடகாவில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மனித - வன விலங்கு மோதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்திற்கென தனி யானை பணிக்குழு அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டது. இது குறித்து அடுத்த மூன்று நாட்களில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த குழுவில், 32 பேர் இருப்பர். ஐந்து புலிகள் இறந்த வழக்கில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. வன பாதுகாவலர் உட்பட பணிகளுக்காக, 310 பேர் பணியமர்த்தப்பட்டனர். மேலும், 540 ரோந்து வன பாதுகாவலர்களை நியமிக்கும் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
05-Aug-2025