மேலும் செய்திகள்
மைசூரில் 416வது ஆண்டு தசரா விழா நாளை துவக்கம்
10-Oct-2026
– நமது நிருபர் – சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தசராவை முன்னிட்டு மைசூரு நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. மற்ற மாவட்டங்களில் வசிக்கும் உறவினர்களை, ‘தசரா கொண்டாட எங்கள் வீட்டிற்கு வாருங்களேன்’ என அன்புடன் அழைக்கின்றனர். வீடுகளில் பல வடிவங்களில், கொலு பொம்மைகள் வைத்து வழிபடுகின்றனர். இது வீடுகளை அழகுபடுத்தியுள்ளது. ராமாயண காலம், சனாதன தர்மத்தின் முக்கியத்துவம், மன்னர் கால தசரா உட்பட ஒவ்வொரு வீட்டிலும் வைக்கப்பட்டுள்ள, தசரா பொம்மைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. தசரா கலாசார கமிட்டியும், வீடு, வீடாக சென்று கொலு பொம்மைகளை பார்த்து மதிப்பெண் போடுகின்றனர். தசரா முடிந்ததும் சிறந்த கொலு வைத்தவர்களுக்கு, பரிசு வழங்கவும் தயாராக உள்ளனர்.
10-Oct-2026