மேலும் செய்திகள்
நொறுக்குகள்...
20-Sep-2025
� � உருளைக்கிழங்கு மசாலா செய்யும்போது சோம்பு, பூண்டு இரண்டையும் இடித்து சேர்த்துக் கொள்வது அவசியமாகும். � � பால் கொதிக்க வைக்கும்போது மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். � � சிக்கன் கிரேவியில் தேங்காய் பால் சேர்த்த பின் அதிகமாக கொதிக்க வைக்கக் கூடாது. ஏனெனில், இது சிக்கனின் சுவையை மாற்றக்கூடும். � � பஜ்ஜி செய்யும்போது மாவோடு சிறிதளவு தக்காளி சேர்த்துக் கொள்ளலாம். இதனால், பஜ்ஜியின் சுவை வித்தியாசமாக இருக்கும். � � பெரிய அளவிலான வறுத்த மீனை சாப்பிடும் முன்பு, மீனின் மீது எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு, மீனை சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். � � கேக் செய்யும்போது, மாவு கலவையுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொண்டால் சுவையான மிருதுவான கேக் தயார். � � பலாக்கொட்டை வைத்து சமைக்கும்போது சிறிதளவு பூண்டு பற்களை தட்டி சேர்க்க வேண்டும். இதனால், வாயு பிரச்னை வராது. � � அப்பளத்தை சுட்டு தயிரில் கலந்தால் சுவையான அப்பள தயிர் பச்சடி கிடைக்கும். � � புளி, எலுமிச்சை சாதம் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை அதிகம் சேர்த்தால் சாதத்தின் சுவை அதிகரிக்கும். � � வாழைக்காய், பூண்டு வறுவல் செய்யும்போது அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு செய்தால் சுவை நன்றாக இருக்கும் -நமது நிருபர் -
20-Sep-2025