உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாவட்டம், தாலுகா பஞ்., தேர்தல் தயாராக துணை முதல்வர் அழைப்பு

 மாவட்டம், தாலுகா பஞ்., தேர்தல் தயாராக துணை முதல்வர் அழைப்பு

பெங்களூரு: ''இரண்டு மூன்று மாதங்களில் நடைபெற உள்ள மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது தொடர்பாக பிரியங்க் கார்கேவிடம் தெரிவித்து உள்ளேன்,'' என, துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் தெரிவித்தார். காங்கிரசின், 140வது நிறுவன நாள் விழா, நேற்று குயின்ஸ் சாலையில் உள்ள பாரத் ஜோடா பவனில் நடந்தது. இந்த விழாவில், சிவகுமார் பேசியதாவது: இரண்டு மூன்று மாதங்களில் நடக்க உள்ள மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் பிரியங்க் கார்கேவிடம் தெரிவித்து உள்ளேன். இடஒதுக்கீடு தொடர்பாக, நீதிமன்றங்களில் உள்ள தடைகள் தீர்க்கப்பட்டு, அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்ட உடன், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் தேர்தலுக்கு தயாராகி விட்டது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வெற்றி பெற முடியாது. தேர்தலில் போட்டியிட விரும்போவருக்கான விண்ணப்பங்களை, இப்போது முதல் பெற்றுக் கொள்ளலாம். பொதுவேட்பாளருக்கு 50,000 ரூபாய்; பட்டியலின வேட்பாளருக்கு 25,000 ரூபாய். பெண்களுக்கு, 25,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி, 15ம் தேதிக்குள் தேர்தலில் போட்யிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜி.பி.ஏ.,வில் ஐந்து மாநகராட்சியில் மொத்தம், 369 வார்டுகள் உள்ளன. இதில், 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும், 10 பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும். பூத் அளவில் வேலை செய்வோருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த பணம், கட்சியின் கட்டட நிதிக்கு செல்லும். ஏனெனில், மாவட்ட அலுவலக கட்டுமானத்துக்கு, 20 கோடி ரூபாயும், மாநில அலுவலகம் கட்டுமானத்துக்கு, 60 கோடி ரூபாயும் செலவிடப்படும். பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சலுகை வழங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கோஷமிட்டாலும், பெண்களுக்கு ஏற்கனவே மாதத்துக்கு 2,000 ரூபாய் மற்றும் இலவச பஸ் பயணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், எந்த மாற்றமும் இல்லை. நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ