மேலும் செய்திகள்
அரசியல் சட்டம் தெரியாதா?
04-Sep-2025
ஷிவொக்கா: ''கிருஷ்ணா மேலணை நதி தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் அரசியல் செய்வது சரியல்ல,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். ஷிவமொக்காவில் நேற்று அவர் கூறியதாவது: கிருஷ்ணா மேலணை நதி தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் அரசியல் செய்வது சரியல்ல. பட்னாவிஸ், நீதிபதி அல்ல. எங்கள் தண்ணீர், எங்கள் உரிமை. 524 அடி உயரம் வரை தண்ணீர் சேமிக்க உரிமை உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இப்பிரச்னையில் நாங்கள் முடிவு செய்வோம். பத்ரா மேலணை திட்டத்திற்கு, 5,500 கோடி ரூபாய் வழங்குவதாக, மத்திய அரசு கூறியிருந்தது. தற்போது வரை மாநில அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பத்ரா அணை முழுமையா நிரம்பி, விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வறட்சி ஏற்படும் என்று கூறி வந்தனர். இப்போது அணைகள் நிரம்பி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
04-Sep-2025