நிர்வாகத்தில் மாற்றங்கள் தேஷ்பாண்டே விருப்பம்
கொப்பால் : ''நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். முடிவுகள் விரைந்து எடுக்கப்படுவது அவசியம். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், கர்நாடக நிர்வாக மேம்பாட்டு ஆணைய தலைவருமான தேஷ்பாண்டே அதிருப்தி தெரிவித்தார்.கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பெண்களே, அதிகம் பயணிக்கின்றனர். ஆண்கள் நிற்கவும் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இவர்களால் பஸ்களில் ஏறவே முடிவதில்லை.காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு, 58,000 கோடி ரூபாய் செலவாகிறது. நான் எட்டு முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளேன். அனைவரும் நல்லவர்கள். அவரவர் ஆட்சி காலத்தில, நற்பணிகளை செய்துள்ளனர். வாக்குறுதி திட்டங்கள் விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் உதவியாக உள்ளன.நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். முடிவுகள் விரைந்து எடுக்கப்படுவது அவசியம். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.