மேலும் செய்திகள்
அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை
23-Dec-2025
மைசூரு: ''பிரசாத்' திட்டத்தின் கீழ், சாமுண்டி மலையில் நடக்கும் மேம்பாட்டு பணிகளால், மலையின் பாரம்பரியத்துக்கு எந்த பாதிப்பம் ஏற்படாது,'' என மாவட்ட பொறுப்பு வகிக்கும் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார். மைசூரு சாமுண்டி மலையில் மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தின் கீழ், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை, கோவில் அருகிலேயே துவக்கியதால், மலையில் வசிக்கும் கிராம மக்கள், பா.ஜ.,வினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மைசூரு வந்த அமைச்சர் மஹாதேவப்பா, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று பிரசாத் திட்ட முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரசாத் திட்டத்தின் கீழ், மலையின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் வளர்ச்சி பணகள் நடந்து வருகின்றன. மலையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான், அவர்களின் ஆலோசனை, கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவர்களின் ஆலோசனையை ஏற்று, அதற்கு ஏற்ப திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு பேசினார்.
23-Dec-2025