உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 101 கிலோ எடையுடன் 575 படியேறிய பக்தர்

101 கிலோ எடையுடன் 575 படியேறிய பக்தர்

கொப்பால்: ஹனுமான் பக்தர் ஒருவர், 101 கிலோ சோள மூட்டையை சுமந்தபடி, அஞ்சனாத்ரி மலை மீது ஏறி நேர்த்திக்கடனை செலுத்தினார். பாகல்கோட் மாவட்டத்தின், பிசிலதின்னி கிராமத்தில் வசிப்பவர் நவீன், 19. இவர் ஆஞ்சநேயரின் பக்தர். இவர் 101 கிலோ சோள மூட்டையை தோளில் சுமந்து, மலையேறி வருவதாக கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின் அஞ்சனாத்ரி ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொண்டார். இதன்படி, நேற்று காலை கோவிலுக்கு வந்த நவீன், 101 கிலோ சோள மூட்டையை சுமந்து, 575 படிகளில் ஏறி, கோவிலை அடைந்தார். ஒன்றரை மணி நேரத்தில் மலையை ஏறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவரை, கோவில் நிர்வாகத்தினர் கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை