உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / என் நற்பெயருக்கு பாதிப்பு டி.ஜி.பி., அலோக்குமார் அதிருப்தி

என் நற்பெயருக்கு பாதிப்பு டி.ஜி.பி., அலோக்குமார் அதிருப்தி

பெங்களூரு: ‘தேசிய அளவில் எனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என, தலைமை செயலர் ஷாலினிக்கு, சிறை துறை டி.ஜி.பி., அலோக்குமார் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, எனது தலைமையில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் அமைத்தது. என்னை தலைவராக நியமித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1ம் தேதி நடந்த விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், அலோக்குமார் மீது தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கு சி.பி.ஐ.,யில் நிலுவையில் உள்ளதாக கூறினார். ஆனால், அந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையும் ஏற்றுக்கொள்ள ப்பட்டது. வழக்கில் என் மீது துறைரீதியான விசாரணை நடத்த தேவையில்லை என்றும் அரசு உத்தரவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் போது, என் மீதான தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கு நிலுவையில் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் கூறியதன் மூலம், தேசிய அளவில் எனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வருத்தம் அடைந்துள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு முன், உண்மை நிலவரம் அடங்கிய சான்றிதழை, அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை