உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தர்மஸ்தலா வழக்கு விசாரணை அறிக்கை வரும் 29க்குள் தாக்கல் செய்ய உத்தரவு 

 தர்மஸ்தலா வழக்கு விசாரணை அறிக்கை வரும் 29க்குள் தாக்கல் செய்ய உத்தரவு 

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் இதுவரை நடந்த விசாரணை பற்றி, வரும் 29 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத் காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, பொய் புகார் அளித்த சின்னையா என்பவரை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவர் ஜாமினில் உள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சின்னையா தாக்கல் செய்த மனு: தர்மஸ்தலா வழக்கில் மஞ்சுநாதா கோவில் நிர்வாகம் மீது அவதுாறு பரப்பும்படியும், உடல்களை புதைத்ததாக பொய் சொல்லும்படியும் என்னை துாண்டி விட்ட, மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், சமீர் பற்றி, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் என்னிடம் விசாரித்த போது கூறினேன். ஆனால் இந்த வழக்கில் என்னை மட்டுமே கைது செய்தனர். மற்றவர்களை கைது செய்யவில்லை. முதற்கட்ட குற்றப்பத்திரிகை மட்டும் தாக்கல் செய்துள்ளனர். முழுமையான குற்றப்பத்திரிகையை இன்னும் சமர்பிக்கவில்லை. விசாரணையில் அலட் சியம் காட்டுகின்றனர். இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, இதுவரை நடந்த விசாரணை பற்றி, வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்டனர். ஆட்சேபனை மனு தாக்கல் செய்யவும், மாநில அரசு, எஸ்.ஐ.டி.,க்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை