உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஈ.டி., சோதனையில் ரூ.7.50 லட்சம் டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கின

 ஈ.டி., சோதனையில் ரூ.7.50 லட்சம் டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கின

பெங்களூரு: பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிய நிறுவனங்களில், ஈ.டி., நடத்திய சோதனையில் 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் சிக்கியது தெரிந்துள்ளது. சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, இந்தியாவில் இருந்து ஆள்சேர்த்து விட்டது; நிதியுதவி செய்தது பற்றி என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்துகிறது. இவர்கள் தாக்கல் செய்ய குற்றப்பத்திரிகையில் பெங்களூரில் இருந்து பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது பற்றி கூறப்பட்டு இருந்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஈ.டி., எனும் அமலாக்கத் துறையினர் பெங்களூரு வசந்த்நகரில் உள்ள 'இக்ரா வெல்பர் டிரஸ்ட்' என்ற பெயரில் செயல்படும் வரும் ஆளுமை மேம்பாட்டு பயிலரங்கம், 'கைடன்ஸ் பார் மேன்கைண்ட்' எனும் மனிதலகுலத்திற்கான வழிகாட்டுதல் அமைப்பு நிறுவனம் உட்பட எட்டு இடங்களில், கடந்த 20ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சிக்கிய வங்கிக்கணக்கு விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர். ஐபோன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பை கணக்கிட்ட போது 7.50 லட்சம் ரூபாய் என்பது தெரிந்தது. இதுபற்றி ஈ.டி., நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !