உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலாவில் தொடரும் ஏமாற்றம் எஸ்.ஐ.டி.,க்கு கூடுதல் அதிகாரம்

தர்மஸ்தலாவில் தொடரும் ஏமாற்றம் எஸ்.ஐ.டி.,க்கு கூடுதல் அதிகாரம்

மங்களூரு: தர்மஸ்தலாவில் புதிய இடத்தில் தோண்டும் பணிகள் நடந்தன. ஆனால், எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் அடையாளம் காணப்பட்டதில், ஏற்கனவே 12 இடங்கள் தோண்டப்பட்டன. நேற்று கடைசி இடமான 13வது இடம் தோண்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பள்ளம் தோண்டப்படவில்லை. புதிதாக தர்மஸ்தலா கிராமத்துக்கு அருகில் உள்ள போலியார் கிராமத்தில் நான்கு இடங்களை புகார்தாரர் அடையாளம் காண்பித்தார். இந்த நான்கு இடங்களிலும் மனித எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், புகார்தாரர் தன் முடிவில் உறுதியாக இருப்பதால், இன்றும் தோண்டும் பணிகள் நடக்கும் என தெரிகிறது. எஸ்.டி.ஐ., அதிகாரிகள் குழுவிற்கு போலீஸ் நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய வழக்குகள் பதிவு செய்ய, கைது செய்ய, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, தனக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் அடையாளம் தெரியாத புகார்தாரர் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மனு தள்ளுபடி தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் குறித்து அவதுாறு தெரிவிக்க தடை கோரி, ஹர்ஷேந்திர ஹெக்கடே தாக்கல் செய்த மனு, நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 'பேச்சு சுதந்திரம் உள்ள நாட்டில் அனைத்து விஷயங்களுக்கும் தடை விதிக்க முடியாது. குறிப்பிட்ட வழக்குகளுக்கு மட்டுமே பேசக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த வழக்கை விசாரணை நீதிமன்றமே விசாரிக்கும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ