உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எலும்பு முறிவு ஆப்பரேஷன் செய்த டாக்டர் எம்.எல்.ஏ.,

எலும்பு முறிவு ஆப்பரேஷன் செய்த டாக்டர் எம்.எல்.ஏ.,

பெங்களூரு: தன் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, கை எலும்பு முறிவுக்கு, டாக்டரான குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் அறுவை சிகிச்சை செய்தார்.துமகூரு மாவட்டத்தின் குனிகல் தாலுகாவின் அம்மத்துார் அருகில் உள்ள தொட்டகல்லஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் பரமேஷ், 37. இவர் சில நாட்களுக்கு முன்பு, பைக்கில் சென்றபோது விபத்து நேர்ந்தது. இதில் அவரது கை எலும்பு முறிந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.பொருளாதார பிரச்னையால், அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. எனவே குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத்தை சந்தித்து உதவி கேட்டார்.அரசியல்வாதியாக இருந்தாலும், தொழிலில் டாக்டரான ரங்கநாத், பரமேஷுக்கு, தானே அறுவை சிகிச்சை செய்ய முன் வந்தார். அவரை உடனடியாக பெங்களூரின் பவுரிங் மருத்துவமனையில் சேர்த்தார். பரமேஷுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்தார். அவர் நலமாக உள்ளார்.எம்.எல்.ஏ., ரங்கநாத் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை