உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டாக்டர் சீட் மோசடி பெற்றோருக்கு அறிவுரை

டாக்டர் சீட் மோசடி பெற்றோருக்கு அறிவுரை

பெங்களூரு: மாநில மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில் 1,47,782 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்; 1,42,369 பேர் தேர்வு எழுதினர்; 83,582 பேர் தகுதி பெற்றனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இடைத்தரகர்களின் மோசடி வலையில் சிக்க வேண்டாம். விதிகளை கடைபிடியுங்கள்.கர்நாடக தேர்வு ஆணையத்தின் மூலம், நல்ல கல்லுாரிகளில் சீட் கிடைக்கும். இதில், மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி