உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / என் பிறந்த நாளை கொண்டாடாதீர்: சிவகுமார்

என் பிறந்த நாளை கொண்டாடாதீர்: சிவகுமார்

பெங்களூரு: 'என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்' என, கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்களுக்கு துணை முதல்வர் சிவகுமார் கட்டளையிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அவர் பிறப்பித்த உத்தரவு:என் பிறந்த நாள், இம்மாதம் 15ம் தேதி வருகிறது. அன்றைய தினம் நான் ஊரில் இருக்க மாட்டேன். எனவே ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் என்னை சந்திக்க வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ வர வேண்டாம். சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள்.என் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் பிளக்ஸ், பேனர்கள் பொருத்த கூடாது. நாளிதழ்களில் விளம்பரமும் அளிக்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ