வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவனுகள திருத்தவே முடியாது. IT கம்பெனிகளில் லட்ச கணக்குல சம்பளம் வாங்க வேண்டியது. இந்த மாதிரி பொது இடத்துல செய்ய வேண்டியது. சமூக பொறுப்புணர்ச்சியோட நடத்துக்கோங்க.
பெங்களூரு: 'இங்கு ரொமான்ஸ் செய்யாதீர்கள், இது ஓயோ இல்லை' என்று, காதல் ஜோடிகளை எச்சரிக்கும் வகையில், டிரைவர் தனது காரில் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்.பூங்கா, ரயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், சில காதல் ஜோடிகள் முத்த மழை பொழிவதுடன், அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். இது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. யார் என்ன சொன்னாலும், தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பது போல, சில காதல் ஜோடியின் செயல்பாடுகள் உள்ளது. தற்போது பைக்கில் பயணித்தபடி, முத்த மழை பொழிவது காதல் ஜோடிகள் இடையில், 'டிரெண்ட்' ஆகி உள்ளது.இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த, வாடகை கார் டிரைவர் ஒருவர் தனது காரில், நோட்டீஸ் ஒட்டி உள்ளார். அந்த நோட்டீசில், 'எச்சரிக்கை, இங்கு ரொமான்ஸ் செய்ய வேண்டாம். இது கார், உங்களின் தனிப்பட்ட இடமோ அல்லது ஓயோவோ இல்லை. தயவு செய்து கொஞ்சம் தள்ளி அமர்ந்து அமைதியாக வாருங்கள்' என்று எழுதப்பட்டு உள்ளது.இந்த நோட்டீசை ஒரு சமூக ஊடக பயனர் புகைப்படம் எடுத்து, ரெட்டிட் இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதற்கு லைக்குகள் அள்ளுகிறது. இதற்கு கருத்து தெரிவித்து இருப்பவர்கள், 'கார் டிரைவர் இப்படி எழுதி இருப்பதில் எந்த தவறும் இல்லை' என்று கூறி உள்ளனர். இன்னொருவர் இதுபோன்ற எச்சரிக்கை பலகைகளை முதலில், டில்லி மெட்ரோ ரயில்களில் வைக்க வேண்டும் என்று பதிவிட்டு உள்ளார்.
இவனுகள திருத்தவே முடியாது. IT கம்பெனிகளில் லட்ச கணக்குல சம்பளம் வாங்க வேண்டியது. இந்த மாதிரி பொது இடத்துல செய்ய வேண்டியது. சமூக பொறுப்புணர்ச்சியோட நடத்துக்கோங்க.