உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் மார்ச்சில் அறிமுகம் 

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் மார்ச்சில் அறிமுகம் 

பெங்களூரு: 'பிங் நிற பாதையில் அடுத்த ஆண்டு மார்ச்சில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும்' என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.பெங்களூரில் பெமல் தலைவர் சாந்துனு ராய் அளித்த பேட்டியில், ''பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட உள்ள, மெட்ரோ ரயில் பணிகள் பாதி முடிந்துவிட்டன. ரயில் பெட்டிகள் தயாரிப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளோம். அடுத்த ஆண்டு மார்ச்சில், 20 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்க உள்ளோம்,'' என்றார்.இதை உறுதிப்படுத்தும் விதமாக பெங்களூரு மெட்ரோ நிறுவன தலைவர் மஹேஸ்வர ராவ் கூறுகையில், ''பிங் நிற பாதையில், அடுத்த ஆண்டு மார்ச்சில், 20 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு செப்டம்பரில் சோதனை அடிப்படையில் ஓட்டுநர் மெட்ரோ ரயில் இயக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை