உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தசரா சிறப்பு சுற்றுலா: 1,128 பேர் பயணம்

தசரா சிறப்பு சுற்றுலா: 1,128 பேர் பயணம்

பெங்களூரு: மைசூரு தசராவை காண தட்சிண கன்னடா, உடுப்பியில் இருந்து நேற்று 25 பஸ்களில் ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் புறப்பட்டு சென்றனர். கடலோர, மலை மாவட்டங்களில் தசரா விடுமுறை நாட்களில் முக்கிய சக்தி பீடங்கள், புனித தலங்கள், தசரா பண்டிகையின் கோலாகலத்தை காண, கே.எஸ்.ஆர்.டி.சி., மங்களூரு கோட்டம் சார்பில் புகழ் பெற்ற புனித தலங்கள், சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய 'தசரா சிறப்பு தொகுப்பு சுற்றுலா' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று 25 பஸ்களில், 1,128 பயணியர் பயணம் மேற்கொண்டனர். மங்களூரில் இருந்து தலைக்காவிரி - பாகமண்டலாவுக்கு 3 பஸ்களும்; கொல்லுாருக்கு 6 பஸ்களும்; சிகந்துாருக்கு 5 பஸ்களும்; சிருங்கேரிக்கு 5 பஸ்களும்; மங்களூரு நவதுர்காவுக்கு 3 பஸ்களும்; உடுப்பியில் இருந்து சிருங்கேரிக்கு ஒரு பஸ்சும், கொல்லுாருக்கு ஒரு பஸ்சும் புறப்பட்டன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உற்சாகத்துடன் பயணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !