உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காடி சுப்ரமண்யர் கோவிலில் இ - பிரசாத சேவை துவக்கம்

காடி சுப்ரமண்யர் கோவிலில் இ - பிரசாத சேவை துவக்கம்

பெங்களூரு : வரலாற்று பிரசித்தி பெற்ற காடி சுப்ரமண்யர் கோவிலில், சோதனை முறையில் இ - பிரசாதம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலம் பிரசாதத்தை, வீட்டுக்கு வரவழைக்கலாம்.கர்நாடக அரசு, ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட, மாநிலத்தின் முக்கியமான கோவில்களின் பிரசாதத்தை, பக்தர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், இ - பிரசாதம் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. பக்தர்கள் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களை, ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் காடி சுப்ரமண்யர் கோவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் காடி சுப்ரமண்யர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சோதனை முறையில் இ - பிரசாத சேவை துவக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆர்டர் செய்தால், சி.என்.சி., நிறுவனம், அவர்களின் வீடுகளுக்கு பிரசாதத்தை கொண்டு சேர்க்கும்.இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:தற்போது எவ்வளவு தேவைப்படுகிறது என்பதின் அடிப்படையில், பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், நைவேத்திய பிரசாதத்துடன், கல்கண்டு, பாதாம், உலர்ந்த திராட்சை, கடவுளின் உருவப்படம், மஞ்சள், குங்குமம் அடங்கிய பிரசாத பாக்கெட், பக்தர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கப்படும்.விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 120 முதல் 150 ரூபாய் வரை நிர்ணயிக்க ஆலோசிக்கிறோம். போஸ்டல் செலவை பக்தர்களே ஏற்க வேண்டும். வெளி மாநில பக்தர்களுக்கும், கோவில் பிரசாதம் சென்றடையும். விலை விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி