உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் ஈ.டி., சோதனை

காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் ஈ.டி., சோதனை

பெங்களூரு: அந்நிய செலாவணி மோசடி செய்துள்ளதாக வந்த புகாரையடுத்து, பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பா ரெட்டியின் வீடு உட்பட அவரின் உறவினர்கள் வீடு என ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான சித்தார்த்தா கல்வி மையத்தில் மே 21ல், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதுபோன்று கடந்த மாதம் 25ம் தேதி கர்நாடகாவில் பி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி, ஆகாஷ் பொறியியல் கல்லுாரி உட்பட 18 கல்லுாரிகளிலும் சோதனை நடத்தினர்.அந்நிய செலாவணி மோசடி செய்ததாக வந்த புகாரை அடுத்து, சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பா ரெட்டி வீட்டில், நேற்று காலை 7:00 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை துவக்கினர்.ஐந்து கார்களில் வந்திருந்த ஆறு அதிகாரிகள், ஏழு ஊழியர்கள், சுப்பா ரெட்டியின் உறவினர்கள் வீடு, அலுவலகத்திலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.இவருக்கு மலேசியா, ஹாங்காங், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சொத்துகள் உள்ளன.வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும், வங்கிக் கணக்குகள் குறித்தும் சோதனை நடத்தினர்.இச்சோதனை குறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் கேட்டபோது, ''அமலாக்கத்துறை சோதனை குறித்து எனக்கு தெரியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை