உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரின் 5 மாநகராட்சிக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்

பெங்களூரின் 5 மாநகராட்சிக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்

பெங்களூரு : மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்காக அதிகாரிகளை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த மாதம் 2ம் தேதி முதல் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் புதிதாக ஐந்து மாநகராட்சிகள் உதயமாகின. மாநகராட்சிகளின் எல்லைகள், வார்டுகள் பிரிக்கப்பட்டு, கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். தலைமை கமிஷனராக மஹேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பலரும் எதிர்பார்த்திருந்த கவுன்சிலர் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை நடத்த முதலில் அதிகாரிகளை நியமிக்கும்படி கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நடக்கவிருக்கும் கவுன்சிலர் தேர்தலுக்கு அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தந்த மாநகராட்சிகளின் கமிஷனர்களையே தேர்தல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்ட்ரல் மாநகராட்சிக்கு ராஜேந்திர சோழன், கிழக்கு மாநகராட்சிக்கு டி.எஸ்.ரமேஷ், வடக்கு மாநகராட்சிக்கு பொம்மலா சுனில் குமார், தெற்கு மாநகராட்சிக்கு கே.என்.ரமேஷ், மேற்கு மாநகராட்சிக்கு ராஜேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரியாக மஹேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை