உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யானைகள் எடை ஸ்ரீகண்டா டாப்

 யானைகள் எடை ஸ்ரீகண்டா டாப்

மைசூரு தசராவுக்கு முதற்கட்டமாக வந்துள்ள ஒன்பது யானைகளின் எடை நேற்று பார்க்கப்பட்டது. இதில், ஸ்ரீகண்டா யானை, 5,790 கிலோ எடையுடன் உள்ளது. மைசூரு தசரா விழா அக்., 11 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக, முதல் கட்டமாக வந்த ஒன்பது யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்கி உள்ளன. முகாமில் அளிக்கப்பட்ட உணவு சாப்பிட்ட யானைகளுக்கு, நேற்று அவைகளின் எடையை ஆய்வு செய்ய, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன. பின், தன்வந்த்ரி சாலையில் உள்ள சரக்கு லாரிகளின் எடை பார்க்கும் மையத்துக்கு ஒன்பது யானைகளும் அழைத்து செல்லப்பட்டன. இதில், ஸ்ரீகண்டா 5,790; ஏகலைவா 5,600; தனஞ்செயா 5,530; மகேந்திரா 5,490; பிரசாந்த் 5,205; கோபி 5,170; ஸ்ரீராமா 4,820; லட்சுமி 3,990; காவேரி 3,075 கிலோ எடை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ