மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
20-Sep-2026
செய்திகள் சில வரிகளில்...
20-Sep-2026
கார் விபத்தில் மாஜி அமைச்சர் ரமாநாத் படுகாயம்
20-Sep-2026
பெங்களூரு: பெங் களூரில் குடிநீர் வினியோகம், வடிகால் தொடர்பா ன பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் பொறுப்பு பொறியாளர்களிடம் உள்ளதாக குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா கூறினார். பெங்களூரு கு டிநீர், வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் தேசிய பொறியாளர் தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், குடிநீர் வாரிய தலைவர் மஞ்சுளா பேசியதாவது: அதிக தொழில்நுட்பங்கள் இல்லாத கால கட்டத்திலேயே பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். அவரது கொள்கைகளை தற்போதைய பொறியாளர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். பெங்களூரில் குடிநீர் வினியோகம், வடிகால் தொடர்பான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் பொறுப்பு பொறியாளர்களிடம் இருக்கிறது. குடிநீர் வாரியத்திற்கு தினமும் நுாற்றுக்கணக்கான புகார்கள் வருகின்றன. இதற்கு தீர்வு காண்பதில் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் மனப்பான்மையை அனைவரும் வளர்க்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை பொறியாளர்கள் திறம்பட பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
20-Sep-2026
20-Sep-2026
20-Sep-2026