உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உயர்ந்த தலைவராக மாறிய எத்னால் ரமேஷ் ஜார்கிஹோளி சான்றிதழ்

உயர்ந்த தலைவராக மாறிய எத்னால் ரமேஷ் ஜார்கிஹோளி சான்றிதழ்

பெலகாவி: ''லிங்காயத், ஹிந்து தலைவர்கள் இடையே சிறந்த தலைவராக எத்னால் உயர்ந்து நிற்கிறார். விஜயேந்திரா இறங்கு முகமாக மாறியுள்ளார்,'' என கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார். பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ஜ.,வில் இருந்து எத்னால் வெளியேற்றப்பட்ட நாளில் இருந்து, அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறேன். தற்போது பீஹார் சட்டசபை தேர்தல், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவில் பா.ஜ., மேலிடம் தீவிரமாக உள்ளது. பா .ஜ.,வில் இருந்து எத்னால் வெளியேற்றப்பட்ட பின், அவரையும், விஜயேந்திராவையும் ஒப்பிட்டு பாருங்கள். லிங்காயத், ஹிந்து தலைவர்கள் இடையே சிறந்த தலைவராக எத்னால் உயர்ந்து உள்ளார். விஜயேந்திரா இறங்கு முகமாக மாறியுள்ளார். இது, அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒன்று. இன்றைய பா.ஜ.,வுக்கு எத்னாலின் தலைமை இன்றியமையாதது. கர்நா டகாவில் பா.ஜ.,வின் வளர்ச்சியில் எடியூரப்பாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதில் எந்த சமரசமும் இல்லை. மாநில தலைவராக விஜயேந்திரா ஏன் நியமிக்கப்பட்டார் என்று எனக்கு தெரியவில்லை. புதிய கட்சி துவக்க கூடாது என்பதற்காக, எத்னாலை மீண்டும் மீண்டும் சந்தித்து பேசி வருகிறேன். சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, சதீஷ் ஜார்கிஹோளி என யாராவது முதல்வராக்கட்டும். அது காங்கிரசின் உட்கட்சி விவகாரம். இதை பா.ஜ., தலைவர்கள் திரும்ப திரும்ப பேசுவதை பார்க்கும் போது, அருவருப்பாக உள்ளது. எதிர்க்கட்சியாக பா.ஜ., சிறப்பாக செயல்பட வேண்டும். சிவகுமார் முதல்வராக இருப்பார். ஆனால், யார் ஏக்நாத் ஷிண்டே ஆவார் என்ற கேள்விக்கு, யாராலும் பதிலளிக்க முடியாது. காங்கிரஸ் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் தொடர வேண்டும். அப்போது அக்கட்சி தானாக கீழிறங்கும். கடந்த சட்டசபை தேர்தலில், அதானி தொகுதியில், கடினமாக உழைத்தபோதும், 74 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனால், இன்று எங்கள் கட்சி சரியான திசையை நோக்கி செல்கிறது. 2028ல் லட்சுமண் சவதி தோற்பது உறுதி. கலபுரகி தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் சிறப்பாக நடந்தது. பிரியங்க் கார்கே, இதை ஏன் சர்ச்சைக்குரியதாக மாற்றினார் என்று தெரியவில்லை. கட்சி வேறுபாடு இருந்தாலும், கார்கேவுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அவர் கட்சியில் இல்லை என்றால், எதிர்காலத்தில் மிகவும் கடினமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !