உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / படுக்கை அறைகளில் கூட ஒட்டு கேட்கப்படுகிறது

படுக்கை அறைகளில் கூட ஒட்டு கேட்கப்படுகிறது

சித்ரதுர்கா : “மாநிலத்தில் படுக்கையறைகளில் கூட ஒட்டுக் கேட்கப்படுகிறது,” என, சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் புகார் தெரிவித்துள்ளார்.அவர் அளித்த பேட்டி:மாநிலத்தில் படுக்கையறைகள் கூட ஒட்டுக் கேட்கப்படுகிறது. அதனால், மொபைல் போன்களை ஒட்டுக் கேட்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவோர் விதான் சவுதாவில் அமர்ந்தால், மாநிலத்தில் நடக்கும் ஆட்சியின் நிலைமை என்ன ஆகும்? முதல்வர் சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், மக்கள் அவரை விரட்டியடிக்கும் காலம் வெகு தூரம் இல்லை. சட்டசபையில் ஹனி டிராப் பிரச்னை குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.இல்லையெனில் தானாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.பெண்களை இழிவுபடுத்தும் ஒரு அரசாங்கம் இருக்க வேண்டுமா? 75 ஆண்டுகளில் இவ்வளவு மோசமான அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை