உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எத்னாலுக்கு ஆதரவு தெரிவிப்பதா? மிருதுஞ்செய சுவாமிகள் மீது அதிருப்தி!

எத்னாலுக்கு ஆதரவு தெரிவிப்பதா? மிருதுஞ்செய சுவாமிகள் மீது அதிருப்தி!

பெங்களூரு: பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு ஆதரவாக நிற்கும் பசவ ஜெய மிருதுஞ்செய சுவாமிகள் மீது, பஞ்சமசாலி சமுதாயத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கும்படி எச்சரித்துள்ளனர்.கட்சி தலைவர்களை விமர்சிப்பதுடன், மனம் போனபடி பேசி கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தும் பசனகவுடா பாட்டீல் எத்னாலை, பா.ஜ., மேலிடம் ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கியது. இதனால் கூடல சங்கமா மடத்தின் பசவ மிருதுஞ்செய சுவாமிகள் அதிருப்தி அடைந்துள்ளார். எத்னாலை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்ப பெறாவிட்டால், போராட்டம் நடத்துவதாக எச்சரித்தார்.இதற்கு பஞ்சமசாலி சமுதாயத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர். 'மடாதிபதிக்கு அரசியல் அவசியம் இல்லை' என, கூறினார்.பா.ஜ.,வின் பஞ்சமசாலி சமுதாய தலைவர் விஜு கவுடா பாட்டீல் அளித்த பேட்டி: மிருதுஞ்செய சுவாமிகள், பா.ஜ.,வின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல், சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணிகளை, செய்ய வேண்டும். எத்னாலை கட்சியில் இருந்து நீக்கியது, பா.ஜ., எடுத்த முடிவு.எத்னாலை ஆதரித்து பேசுவதன் மூலம், அவரை பஞ்சமசாலி சமுதாயத்தின் முக்கியமான தலைவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பஞ்சமசாலி சமுதாயத்துக்கு தவறான தகவல் தருகிறார். சமுதாய கவுரவத்தை பாழாக்குகிறார். பஞ்சமசாலி சமுதாய தலைவர்கள் பலரும், பா.ஜ.,வின் முடிவை வரவேற்றனர். ஆனால் மிருதுஞ்செய சுவாமிகள் மட்டும், எத்னாலை ஆதரிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவரை கட்சியில் இருந்து நீக்கியதை கண்டித்துள்ளார். தன் சமுதாய தலைவர்களின் உணர்வுக்கு, மிருதுஞ்செய சுவாமிகள் மதிப்பளிக்கவில்லை. தன் தவறை திருத்தி கொள்ள, எத்னாலுக்கு பா.ஜ., மேலிடம் போதிய வாய்ப்பு அளித்தது. திருத்தி கொள்ளாத காரணத்தால், கட்சியை விட்டு நீக்கியது.இந்த விஷயத்துக்கும், சமுதாயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எத்னால் அனைவரையும் விமர்சிக்கிறார். தன் செயல்களால் தான் அவர் இந்த நிலைக்கு வந்துள்ளார். மைக் கிடைத்து விட்டால், ஆக்ரோஷமாக பேசுகிறார். யாரையும் விட்டு வைப்பது இல்லை. தன் பலவீனம் குறித்து, எத்னாலுக்கு நன்றாக தெரியும் என்ற காரணத்தால், இவரை மிருதுஞ்செய சுவாமிகள் ஆதரிக்கிறாரா; பஞ்சமசாலி தலைவர்களின் உணர்வுகளை மதிக்காமல், எத்னாலை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ