உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இன்ஜினியர்களிடம் பணம் கேட்டு மிரட்டல் 

இன்ஜினியர்களிடம் பணம் கேட்டு மிரட்டல் 

கெங்கேரி : பெங்களூரு கெங்கேரி அருகே பி.டி.ஏ., சார்பில் கெம்பேகவுடா லே - அவுட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை பி.டி.ஏ., இன்ஜினியர்கள் அசோக், வருண், பரசுராம், ஜெயதீப் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்ஜினியர்கள் நான்கு பேரின் மொபைல் போன் நம்பருக்கும், மர்மநபர்கள் இருவர் அடிக்கடி பேசி உள்ளனர்.'பி.டி.ஏ., பணிகளை செய்யும் கான்ட்ராக்டர்களிடம் இருந்து, நீங்கள் லஞ்சம் வாங்கி உள்ளீர்கள்.'அந்த லஞ்சத்தில் எங்களுக்கு 27 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்வோம்' என்று, மிரட்டி உள்ளனர். கெங்கேரி போலீசில், இன்ஜினியர் ஜெயதீப் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ