மேலும் செய்திகள்
தீபாவளிக்கு மக்களுக்காக பணி செய்வதால் மகிழ்ச்சி
09-Nov-2026
துமகூரு: துமகூரு நகரின் ஜக்கேனஹள்ளியில் வசித்தவர் முத்துராஜ், 33. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பெங்களூரு சென்று தொழிற்சாலை ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அந்த பணியை விட்டு விட்டு மூன்று நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு திரும்பினார். முத்துராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் பாய் விரித்து படுத்திருந்தார். நேற்று காலை இவரது சகோதரி நரசம்மா, வெளியே வந்து பார்த்த போது, முத்துராஜின் முகத்தில் கம்பளி மூடியிருந்தது. அவரை எழுப்பும் போது ரத்தக்கறையை பார்த்து சகோதரி அதிர்ச்சி அடைந்தார். முத்துராஜின் தலை, காது பகுதியில் இரும்புத்தடியால் தாக்கி, கொலை செய்யப்பட்டிருந்தார். துமகூரு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துராஜின் கொலையில், அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
09-Nov-2026