உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிவாரணம் தராததை கண்டித்து தீக்குளித்த விவசாயி மரணம்

நிவாரணம் தராததை கண்டித்து தீக்குளித்த விவசாயி மரணம்

பெங்களூரு: மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டின் முதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சே கவுடா, 55; விவசாயி. சில ஆண்டுகளுக்கு முன், மேம்பாட்டுப் பணிக்காக, மஞ்சே கவுடாவின் 2 ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக 49 வீடுகள் கட்டி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், நிலத்துக்கான நிவாரணமோ அல்லது மாற்று நிலமோ அரசு வழங்கவில்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் மனு கொடுக்க கடந்த 3ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு மஞ்சே கவுடா வந்தார். பின், எதிரே உள்ள காவேரி பூங்காவிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கிய அவர், மறுநாள் நவ., 4ம் தேதி பார்க்கில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த பூங்காவில் இருந்தவர்கள், போலீசா ர், அவரை மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைக்காக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று காலை மஞ்சே கவுடா உயிரிழந்தார். தகவல் அறிந்த வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி, மருத்துவமனையில் விவசாயி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது மனைவிக்கு ஆறுதல் கூறி, ''ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்,'' என, உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ