உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கரடி தாக்கி விவசாயி காயம்

 கரடி தாக்கி விவசாயி காயம்

சிக்கமகளூரு: கரடி தாக்கியதில், விவசாயி பலத்த காயமடைந்தார். சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவின் ஏ.ராமனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ராமகிருஷ்ணா, 40. இவர் நேற்று காலை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நடந்து சென்றார். அப்போது, அவர் மீது பாய்ந்த கரடி தாக்கியது. ஆனாலும், அவர் கரடியுடன் போராடி, தன்னை விடுவித்து கொண்டு ஊருக்குள் ஓடினார். அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார். அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கரடி நடமாடுவதால், யாரும் தோட்டத்துக்கு செல்ல வேண்டாம் என, கிராமத்தினரை எச்சரித்தார். தகவலறிந்த வனத்துறையினர், கிராமத்துக்கு வந்து பார்வையிட்டனர். கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ