உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பூங்காவில் துரித உணவகம் நடத்தியவர் மர்ம கொலை

 பூங்காவில் துரித உணவகம் நடத்தியவர் மர்ம கொலை

குமாரசாமி லே - அவுட்: 'எக் ரைஸ்' கடை உரிமையாளரான, 20 வயது இளைஞர், மாநகராட்சி பூங்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பெங்களூரு குமாரசாமி லே - அவுட்டை சேர்ந்தவர் ராகேஷ், 20. ராஜ்யோத்சவா நகரில், எக் ரைஸ் போன்ற பாஸ்ட் புட் தயாரிக்கும் துரித உணவகம் நடத்துகிறார். நேற்று காலை இங்குள்ள மாநகராட்சி பூங்காவில், ராகேஷ் இறந்து கிடப்பதாக, குமாரசாமி லே - அவுட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்த போலீசார், ராகேஷின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து, பெங்களூரு தென் மேற்கு பிரிவு, டி.சி.பி., அனிதா கூறியதாவது: இறந்த ராகேஷ், இன்று அதிகாலை 1:30 மணிக்கு, அவரின் நண் பர்களின் ஒருவருக்கு போன் செய்துள்ளார். அப்போது, ஏற்கனவே திட்டமிட்டபடி, மன்சனபெலேவுக்கு மீன் பிடிக்க செல் லலாம் என கூறி உள்ளார். பின், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, மாநகராட்சி பூங்காவில் இருந்து ராகேசும், அவரது நண்பர்களும் சுவர் ஏறி குதித்தது பதிவாகி உள்ளது. அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, முழு விவரமும் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை