மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை
பெங்களூரு: பெங்களூரின் மஹாலட்சுமி லே - அவுட்டில் வசிப்பவர் மனோஜ் விஷ்வகர்மா, 40. இவருக்கு மனைவியும், 16 வயது மகள் உட்பட நான்கு பிள்ளைகளும் உள்ளனர். மனோஜ் விஷ்வகர்மாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. கடந்த 2023ன் ஜூன் 6ம் தேதியன்று, சிறுமியின் தாய்வழி பாட்டி காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க, தன் குடும்பத்துடன் சொந்த கிராமத்துக்கு சென்றார். அதே நாள் மாலையில், மனோஜ் விஷ்வகர்மா பெங்களூருக்கு திரும்பினார். அன்றிரவு குடிபோதையில் வந்த மனோஜ் விஷ்வகர்மா, மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். சம்பவம் குறித்து மஹாலட்சுமி லே - அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மனோஜ் விஷ்வகர்மா கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி சுஜாதா, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.