உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுகாதாரமற்ற மீன் மார்க்கெட் நோய் பரவும் அச்சம்

சுகாதாரமற்ற மீன் மார்க்கெட் நோய் பரவும் அச்சம்

தங்கவயல் : ராபர்ட்சன் பேட்டை எம்.ஜி.மார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் கழிவு நீர், செல்ல வசதி இல்லை. கழிவுநீர் வெளியேறும் கால்வாய் மீது கடை ஒன்றையும் கட்டியுள்ளதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வாடிக்கையாளர் கிரண் ராஜ் கூறுகையில், ''மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், ராபர்ட் சன் பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு சென்றாலே திடமாக இருப்பவர்களும் நோயாளியாக வேண்டியது தான். சுகாதார சீர்கேடு உள்ளது. சாக்கடை மிதக்கிறது. ''துர்நாற்றம் மிகுந்த இடமாக இருப்பதால் நகராட்சியினர் இதில் கவனம் செலுத்தி துப்புரவு செய்ய வேண்டும். சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இங்கு வந்து பார்வையிட வேண்டும்,'' என்றார்.சரவணன், மீன் வியாபாரி:மீன் மார்க்கெட் நகராட்சிக்கு சொந்தமானது. வாடகை, வரி செலுத்தி வருகிறோம். இங்கு கழிவு நீர் வெளியேறாததால் சாக்கடையில் நின்று வியாபாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் குறைகிறது. எங்களுக்கும் சுகாதாரம் தேவை. எங்களுக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் இங்கு யாரும் வருவதில்லை. மீன் மார்க்கெட்டுக்கு தனியாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். நாங்களும் சுகாதாரமாக வியாபாரம் செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ