உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிரஹலட்சுமி பணத்தில் பசு வாங்கிய பெண் விவசாயி

கிரஹலட்சுமி பணத்தில் பசு வாங்கிய பெண் விவசாயி

ஹாவேரி: விவசாய பெண் ஒருவர், 'கிரஹ லட்சுமி' திட்டத்தின் கீழ் கிடைக்கும் 2,000 ரூபாயை சேமித்து வைத்து, பசு மாடு வாங்கியுள்ளார்.காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, ஐந்து வாக்குறுதித் திட்டங்களில் 'கிரஹ லட்சுமி' திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ், குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த பணத்தில், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் என, பல பொருட்களை வாங்கினர். பெண்ணொருவர் தன் மகனுக்கு பைக் வாங்கிக் கொடுத்தார்.மற்றொரு பெண் தன் மருமகளுக்கு பேன்சி ஸ்டோர் வைத்துக் கொடுத்தார். சிலர் தங்களின் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தனர்.இது போன்று பலரும், வீட்டின் தேவைக்கு பயன்படுத்துகின்றனர். கணவரின் தேவைக்கும் கொடுக்கின்றனர். தற்போது விவசாய பெண், பிழைப்புக்காக பசு வாங்கி உள்ளார்.ஹாவேரி மாவட்டம், ஷிகாவி தாலுகாவின், குந்துார் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி விசாலாட்சி. இவர் மாதந்தோறும் தனக்கு கிடைத்த கிரஹலட்சுமி உதவித்தொகையை சேமித்து வைத்து, ஒரு பசு வாங்கியுள்ளார்.இந்த திட்டத்தை கொடுத்ததற்காக, முதல்வர் சித்தராமையா, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு, விசாலாட்சி நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை