உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அபராத தொகை ரூ.21 கோடி வசூல்

அபராத தொகை ரூ.21 கோடி வசூல்

பெங்களூரு: வாகனங்கள் மீதான அபராத தொகையில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டதையடுத்து, 21 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக பெங்களூரு நகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின்படி, கடந்த 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை அபராதம் செலுத்தலாம். 2023 பிப்ரவரி 11க்கு முன்னால் விதிக்கப்பட்ட அபராதத்துக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. அபராத தொகையை ஆன்லைனில் செலுத்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கு வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரை செலுத்தப்பட்ட அபராத தொகை குறித்த தகவல்களை பெங்களூரு நகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். நேற்று மட்டும் 60,811 வழக்குகள் தீர்க்கப்பட்டு, 1.78 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கடந்த ஏழு நாட்களில் 7,43,160 வழக்குகளில் 21 கோடி ரூபாய் அபராதம் வசூலாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை