மேலும் செய்திகள்
ஏழு கடைகளில் தீ விபத்து பல லட்சம் பொருள் நாசம்
10-Jan-2026
விஜயபுரா: கார் சர்வீஸ் சென்டர் ஒன்றில், எதிர்பாராமல் தீப்பிடித்ததில் 1.34 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கார்கள் தீக்கிரையாகின. விஜயபுரா புறநகரின், தேசிய நெடுஞ்சாலை - 50ல், ஹெச்.எம்.கே., கார் சர்வீஸ் சென்டர் உள்ளது. இது ஹனுமந்த கனமடி என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு சர்வீஸ் செய்வதற்காக, 20க்கும் மேற்பட்ட கார்கள் வந்திருந்தன. நேற்று காலை சர்வீஸ் சென்டரில், எதிர்பாராமல் தீப்பிடித்தது. இதை கண்ட அப்பகுதியினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். சம்பவம் நடந்த போது, சர்வீஸ் சென்டரில் ஊழியர்கள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. சென்டரில் இருந்த, 1.35 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 20 கார்கள், உதிரி பாகங்கள் தீக்கிரையாகின. தீப்பிடிக்க என்ன காரணம் என தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
10-Jan-2026