உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மிக்சரிலும் அபாயகரமான செயற்கை நிறம் உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி

மிக்சரிலும் அபாயகரமான செயற்கை நிறம் உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி

பெங்களூரு: இனிப்பு பண்டங்கள் மட்டுமின்றி, மிக்சர் உள்ளிட்ட கார தின்பண்டங்களிலும், ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் செயற்கை நிறங்கள் சேர்ப்பதை, உணவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு இனிப்பு பண்டங்கள், பொருட்களின் தரம் குறித்து, ஆய்வு செய்கிறது. தடை செய்யப்பட்ட செயற்கை நிறங்கள் பயன்படுத்தும் தின்பண்டங்கள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. தின்பண்டங்களில் அபாயமான செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுவது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சு மிட்டாய், கேக், ஜிலேபி, கேக், கபாப், கோபி மஞ்சூரியன் உட்பட, பல பொருட்களில் செயற்கை நிறங்கள் சேர்ப்பதற்கு, உணவுத்துறை தடை விதித்துள்ளது. உணவு பொருட்களில், அபாயமான செயற்கை நிறங்களை பயன்படுத்தியது தொடர்பாக, 68 வழக்குகள் பதிவாகியுள்ளன. தின்பண்டங்களை தயாரிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இனிப்பு பண்டங்கள் மட்டுமின்றி, மிக்சர் உள்ளிட்ட கார தின்பண்டங்களிலும், அபாயமான நிறங்களை சேர்ப்பது, உணவுத்துறை நடத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளது. உணவுத்துறை அனுமதித்துள்ள நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிர்ணயித்த அளவில் பயன்படுத்துவது கட்டாயம். உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து, நடைபாதை உணவு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், உணவுத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோன்று, 2024 மற்றும் 2025ல் இதுவரை 13,585 சிறிய தொழிலதிபர்கள், 7,506 ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக, உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி