வனப்பகுதி ஆக்கிரமிப்பு கோலாரில் அகற்றம்
கோலார் : கோலாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, 127 ஏக்கர் வனப்பகுதி நிலம் மீட்கப்பட்டது.கோலார் மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் வனப்பகுதி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இவற்றை மீட்டெடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.கோலார் தாலுகா ஹாட்டி என்ற இடத்தில் வனப் பகுதியில் 127 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்து தானியங்கள், காய்கறிகள் பயிரிட்டப்பட்டிருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. நேற்று காலையில், 'பொக்லைன்' இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் உதவி கலெக்டர் மகேஷ் தலைமையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.உதவி கலெக்டர் கூறுகையில், ''கோலார் தாலுகா மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் வனப் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதில் தயவு தாட்சண்யத்திற்கு இடம் கிடையாது; எல்லாமே சட்டப்படி நடக்கும்,'' என்றார்.