உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசரணப்ப கவுடா மரணம்

 காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசரணப்ப கவுடா மரணம்

கொப்பால்: எலபுர்கா தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசரணப்ப கவுடா, 82, நேற்று மரணம் அடைந்தார். கொப்பால் எலபுர்கா தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசரணப்ப கவுடா. வயோதிகம், உடல்நலக்குறைவால் துமகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கடந்த 1999 முதல் 2004 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, விவசாயிகள் பிரச்னைகளுக்கு சட்டசபையில் குரல் கொடுத்து, அந்த நேரத்தில் கொப்பால் மாவட்டத்தின் பிரபல எம்.எல்.ஏ.,வாக இருந்தார். எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பு, ஹட்டி தங்க சுரங்க தலைவராகவும் பணியாற்றியவர். சிவசரணப்ப கவுடாவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான எலபுர்கா அருகே ஹுனிஸ்யால் கிராமத்தில் இன்று நடக்கிறது. இவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை