உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கார்கேவுக்கு பிரதமராகும் வாய்ப்பு மாஜி எம்.எல்.சி., ஆரூடம்

கார்கேவுக்கு பிரதமராகும் வாய்ப்பு மாஜி எம்.எல்.சி., ஆரூடம்

யாத்கிர், : ''காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமராகும் வாய்ப்பு உள்ளது,'' என, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி., பாபுராவ் சின்சன்சூர் தெரிவித்தார். யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக மாநிலத்தின் சிறந்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு இணையான நிலைக்கு வளர்ந்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவராக உள்ள அவர், இந்திரா, சோனியா, ராகுலுக்கு சமமான அந்தஸ்தில் உள்ளது, பெருமை அளிக்கிறது. கோலி சமூகத்தினரை எஸ்.டி., பிரிவில் சேர்ப்பதாக உறுதி அளித்துள்ளேன். சூரியன் - சந்திரன் எவ்வளவு உண்மையோ, அதுபோன்று, மல்லிகார்ஜுன கார்கே மூலம், கோலி சமூகத்தை எஸ்.டி., பிரிவில் சேர்ப்பேன். பின் வாசல் வழியாகவோ அல்லது முன் வாசல் வழியாகவோ எம்.எல்.சி.,யாக மாட்டேன். மக்களை சந்தித்து தேர்தலில் தோல்வி அடைந்தவன். அடுத்த சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக இத்தொகுதியில் வெற்றி பெற்று, துணை முதல்வராவேன். 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாகவும், 10 ஆண்டுகள் அமைச்சராகவும், 10 ஆண்டுகள் கேபினட் அமைச்சராகவும் இருந்துள்ளேன். எனக்கு தாய், தந்தை, குழந்தைகள் இல்லை. சமூக சேவையை தவிர, வேறு எதுவும் என்னிடம் இல்லை. தர்மஸ்தலாவுக்கு அவப்பெயர் ஏற்பட காங்கிரஸ் ஒருபோதும் துணை நிற்காது. இவ்விஷயத்தில் முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி