உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிராமணர்களை குறைத்து மதிப்பிடும் முதல்வர் மாஜி எம்.பி., பிரதாப் சிம்ஹா குற்றச்சாட்டு

பிராமணர்களை குறைத்து மதிப்பிடும் முதல்வர் மாஜி எம்.பி., பிரதாப் சிம்ஹா குற்றச்சாட்டு

பெங்களூரு: ''பிராமணர்கள் மக்கள்தொகை குறைவாக உள்ளதால், என்ன சொன்னாலும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்று முதல்வர் சித்தராமையா கருதுகிறார்,'' என, மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:சித்தராமையா முதல்வரானாலே, பிராமணர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்துவிடுவார். பிராமணர்கள் மக்கள் குறைவாக உள்ளதால், என்ன சொன்னாலும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறார்.உடுப்பி மாவட்டத்தில் முஸ்லிம் பெண்கள் முகம், உடலை மூடும் ஆடையான 'ஹிஜாப்' விவகாரத்தில், அவர்களுக்கு ஆதரவாக சித்தராமையா பேசினார். தற்போது பிராமணர்களின் பூணுால் அகற்றுமாறு கூறிய விஷயத்தில் ஏன் மவுனம் சாதிக்கிறார்?ஜாதிவாரி கணக்கெடுப்பிலும் பிராமணர்கள் குறைவாக உள்ளனர் என்று தரவுகள் குறிப்பிட்டு உள்ளன. பூணுாலை அகற்றும்படி கூறுவது, ஹிந்துக்கள் மீதான தாக்குதலாகும்.இதுபோன்று ஒக்கலிகர், லிங்காயத் சமூதாயத்தினர் எண்ணிக்கையும் குறைத்து காண்பித்து உள்ளனர். தங்கள் மக்கள்தொகை ஒரு கோடியை தாண்டியதை தலித்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வர். ஆனால் முதல்வரோ, தொடர்ந்து பதவியில் நீடிக்க, ஹிந்துக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவரின் திட்டத்தை அறிந்து, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஒக்கலிகர், லிங்காயத், ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., என்ற மன நிலையில் இருந்து வெளியே வர வேண்டும். இச்சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள், ஹிந்து சமுதாயத்தின் ஒற்றுமைக்காக பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishna
ஏப் 23, 2025 09:36

இந்நாட்டில் ஜாதி வேறுபாடுகளுக்கு காரணம் அரசியல் வாதிகளே. இதில் இப்பொழுது காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு அளிக்கிறது.


புதிய வீடியோ