உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  துமகூரில் விமான நிலையம் மாஜி எம்.பி., விருப்பம்

 துமகூரில் விமான நிலையம் மாஜி எம்.பி., விருப்பம்

துமகூரு: துமகூருக்கு மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த, திட்டம் வகுக்கும் நிலையில், துமகூருக்கு விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இது குறித்து, பா.ஜ., முன்னாள் எம்.பி., பசவராஜ், முதல்வர் சித்தராமையா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: துமகூரில் விமான நிலையம் கட்ட வேண்டும். கனகபுரா, நெலமங்களா அருகில் சர்வதேச விமான நிலையம் கட்ட தேவையான நிலம் இல்லை. ஏற்கனவே நெலமங்களா - குனிகல் சாலையில், விமான நிலையம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் துமகூரில் உள்ள, ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற் பகுதியான வசந்தநரசாபுரா அருகில், சர்வதேச விமான நிலையம் கட்ட, தகுதியான 3,500 ஏக்கர் நிலம் உள்ளது. துமகூரு அருகில் விமான நிலையம் கட்டுவதால், கர்நாடகாவின் 21 மாவட்டங்களின் மக்களுக்கு உதவியாக இருக்கும். துமகூரு நகரம் அதிவேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகும். எனவே இங்கு விமான நிலையம் கட்டினால், விமான போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும். வர்த்தகம் மேம்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை