மேலும் செய்திகள்
தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
12-Feb-2026
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் வி.முனிசாமி, காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். தங்கவயல் நகர காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர், வி.முனிசாமி. தங்கவயல் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ரூபகலாவுக்கு விசுவாசியாக இருந்தவர். 'ரூபகலா அமைச்சர் ஆக வேண்டும்' என்றும் குரல் எழுப்பி வந்தார். அதே நேரம், காங்கிரசில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்றும் கூறி வந்தார். இந்நிலையில், கர்நாடக மாநில பா.ஜ., அலுவலகத்தில் மாநில தலைவர் விஜயேந்திரா முன்னிலையில் நேற்று முனுசாமி பா.ஜ.,வில் இணைந்தார். பின் அவர் கூறுகையில், ''தங்கவயல் நகராட்சியை பா.ஜ., வசம் ஆக்குவேன்,'' என்றார்.
12-Feb-2026