முன்னாள் பிரதமர் தேவகவுடா டிஸ்சார்ஜ்
பெங்களூரு: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா, 92, கடந்த 6ம் தேதி காய்ச்சல் தொற்று காரணமாக பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறு நாட்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிலே ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் தேவகவுடா கூறியதாவது: கடவுள் ஆசிர்வாதத்தால் குணமடைந்து உள்ளேன். மணிப்பால் மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி. என் உடல்நலம் குணமாக வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. என்னை மருத்துவமனையில் பார்க்க வந்த, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி. விரைவில் மக்கள் சேவையை தொடங்குவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.