உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நான்கு வயது சிறுமி  பலாத்காரம் செய்து கொலை

 நான்கு வயது சிறுமி  பலாத்காரம் செய்து கொலை

எலக்ட்ரானிக் சிட்டி: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி, பெங்களூரு புறநகர் விட்டசந்திராவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் இருந்தார். கடந்த 26ம் தேதி மாலையில் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தவரை திடீரென காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து, எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். போலீசார், சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலையில் போலுகுட்டா பகுதியில் உள்ள தோப்பில், இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடை த்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், விசாரணையை துவக்கினர். சிறுமியின் உடலில் உடைகள் இல்லை. அடையாளம் தெரியாத வகையில் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். முகம் சிதைக்கப்பட்டிருந்ததால், உடலில் உள்ள அங்க அடையாளங்களை வைத்து கொல்லப்பட்டது, அசாம் மாநிலத்தை தம்பதி மகள் என்பதை போலீசார் உறுதி செய்தனர். முதல் கட்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக சிறுமியின் முகத்தை கற்களை பயன்படுத்தி சிதைத்ததும் தெரிய வந்து உள்ளது. 'போக்சோ' வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை