உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மத்திய அமைச்சர் பெயரில் ஓய்வுபெற்ற ஊழியரிடம் மோசடி

மத்திய அமைச்சர் பெயரில் ஓய்வுபெற்ற ஊழியரிடம் மோசடி

பெங்களூரு: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில், ஓய்வு பெற்ற ஊழியரிடம் பண மோசடி நடந்துள்ளது. பெங்களூரின், வித்யாரண்யபுராவில் வசிப்பவர் வேணுகுமார். இவர் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனக்கு கிடைத்த ஓய்வூதிய தொகையை, 'ஆன்லைன் டிரேடிங்'கில் முதலீடு செய்தால், லாபம் கிடைக்கும் என நினைத்தார். இதற்காக டிரேடிங் கம்பெனியை தேடி வந்தார். சில நாட்களுக்கு முன்பு, 'யூ - டியூப்' பார்த்து கொண்டிருந்தபோது, டிரேடிங் கம்பெனி விளம்பரத்தை கவனித்தார். அந்த கம்பெனி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமனின் கம்பெனி என கூறப்பட்டிருந்தது. இதன் நம்பகத்தன்மையை ஆராயாமல், அதில் முதலீடு செய்ய முடிவு செய்தார். தன் வங்கிக் கணக்கில் இருந்து, 22,000 ரூபாயை டிரேடிங் கம்பெனிக்கு பரிமாற்றம் செய்தார். பணம் அனுப்பிய சிறிது நேரத்தில், இவரது கணக்கில் இருந்த 1.40 லட்சம் ரூபாய் மாயமானது. அதன் பின்னரே அவருக்கு ஏமாந்தது தெரிந்தது. வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் இந்த புகாரை, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். அங்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை