உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நவ., 22ல் இலவச கன்னட வகுப்பு துவக்கம்

நவ., 22ல் இலவச கன்னட வகுப்பு துவக்கம்

பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பாக, இலவசமாக கன்னடம் கற்பிக்கப்பட உள்ளது. புதிய குழுவுக்கான முதல் வகுப்பு, வரும் 22ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்க உள்ளது. ஒயிட்பீல்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை வளாகத்தில் வகுப்பு நடக்கிறது. இணைய வழியிலும் கன்னடம் கற்றுத்தரப்படும். இது, மூன்று மாத கால வகுப்பாகும். இதில், கன்னடம் பேச, எழுத, படிக்க கற்றுத்தரப்படும். கர்நாடக அரசின் கன்னட மேம்பாட்டு கழகத்தில் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களே வகுப்புகள் எடுக்க உள்ளனர். இந்த வகுப்பு குறித்த மேலும் தகவல்களுக்கு 99010 41889, 81472 12724, 97428 53241 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ